நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது அலகு ஜூன் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து 100 நாட்களுக்கு மூடப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்தப் பணி நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மற்ற அனல் மின் நிலையங்கள் மூலம் மின்வெட்டு இல்லாமல் மின் உற்பத்தி நிர்வகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மின்சார சபை தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் ஊகித்தபடி நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டுகள் ஏற்படாது என அமைச்சர் உறுதியளித்தார்.