உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது தடுப்பூசிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் பல்வேறு நாடுகள், வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்து இருந்தன.
தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
மேலும், உலக நாடுகள் விதித்திருந்த கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. இந்நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கையில்,
அரசாங்க ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றது என அறிவித்துள்ளனர்.