பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஏனைய மதங்கள் தொடர்பில் கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கருத்து நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் அவருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 21ம் திகதி அவர் தனது அறிக்கையினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மன்னிப்பு கோருவதாக சிங்கப்பூரில் இருந்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் நேற்று (26) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் தனது கருத்து குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.