Our Feeds


Wednesday, May 3, 2023

News Editor

தேசிய மக்கள் சக்தியின் மனு குறித்து வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்ததன் மூலம் சர்வஜன வாக்குரிமை உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »