எதிர்வரும் ஜூன் முதல் விமான கடவுச் சீட்டுகளை வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போது கடவுச் சீட்டுகளை பெறுவதற்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஸ்போர்ட்கள் முன்பதிவு முறையில் வழங்கப்பட்டன.அதன்படி, முன்பதிவு செய்தவர்கள் அந்த நிர்ணயிக்கப்பட்ட திகதி மற்றும் நேரத்தில் வந்து சேவைகளைப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் சில தரகர்கள் சட்டவிரோதமான முறையில் மக்களுக்கு சேவைகளை வழங்க முற்பட்டதால் முன்பதிவு செய்யும் பணியை நிறுத்த நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களை ஏமாற்றி பணம் பறித்த பெரும் எண்ணிக்கையிலான தரகர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த நிலை காரணமாக பத்தரமுல்ல குடிவரவு திணைக்கள வளாகத்தில் சில நாட்களாக கடும் மக்கள் கூட்டம் திரண்டுள்ளது .இதனால் மீண்டும் பழைய முறைமை அடுத்தமாதம் முதல் அமுலுக்கு வருகிறது.