உக்ரேனிய ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலேன்ஸ்கி இன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரை அவர் இன்று சென்றடைந்துள்ளார் என சவூதி அரேபியாவின் அல் ஹதாத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அரபு லீக் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக அவர் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.
உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் மத்திய கிழக்குக்கு ஜனாதிபதி ஸேலேன்ஸ்கி விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும்.
'சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளேன். அரபு லீக் உச்சி மாநாட்டில் உரையாற்றுவேன். முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அல் சௌத்தை சந்திக்கவுள்ளதுடன், ஏனைய இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றவுள்ளேன்' என ஜானதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.