Our Feeds


Thursday, May 18, 2023

SHAHNI RAMEES

இலங்கையில் பாதிப்பேருக்கு உயர் இரத்த அழுத்தம்...!

 




இலங்கையில் 62% ஆண்களுக்கும் 48.1% பெண்களுக்கும்

உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது.


உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நேற்று (17ஆம் திகதி) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.



STEPS கணக்கெடுப்பின்படி இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


கடுமையான தலைவலி, நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், வாந்தி, மங்கலான பார்வை ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.


35 வயதுக்கு மேற்பட்ட எவரும் நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் நிறுவப்பட்டுள்ள சுகாதார நிலையங்களில் இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள முடியும்.


உலகளவில் பதிவாகியுள்ள இருதய நோய் மற்றும் அகால மரணத்திற்கு உயர் இரத்த அழுத்தம் ஒரு முக்கிய காரணமாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »