களுத்துறையில் ஐந்து மாடிக் கட்டடத்திலிருந்து 16 வயது சிறுமி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று (15) பலத்த பாதுகாப்பின் மத்தியில் களுத்துறை குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மற்றும் யுவதி, விடுதி உரிமையாளரின் மனைவி மேலும் பிரதான சந்தேக நபரின் சாரதி ஆகிய நால்வரே இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட வேளையில் உயிரிழந்த சிறுமியின் தாய் உட்பட 100 பேர் நீதிமன்றத்திற்கு வெளியில் நின்று சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.