சவுதி அரேபியாவால் போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் 22 கரட் தங்கத்தால் ஆன மோட்டார் சைக்கிள் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
ஆனால் இந்த மோட்டார் சைக்கிள் சவுதி அரேபியாவை சேர்ந்த பைசல் அபு சாரா என்பவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘The Storm’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளில் அசல் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது என்றும் முற்றிலும் உலோகத் தங்கத்தால் உருவாக்கப்படவில்லை என்றும் பைசல் அபு சாரா தெரிவித்துள்ளார்.
இந்த மோட்டார் சைக்கிள் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பரிசளிக்கப்பட்டது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.