பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு முன்மொழிந்த பிரதிநிதிகளுக்கு ஆளுநர் பதவி கிடைத்ததை அடுத்து அவர் இலங்கை திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பசில் ராஜபக்ஷ நாளை மறுதினம் (19) இலங்கைக்கு வர உள்ளதாக தெரியவந்துள்ளது.
பசில் ராஜபக்ஷ கடந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து ஆளுநர்கள் நியமனம் தொடர்பில் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்கள் பசில் ராஜபக்ஷ அவர்களால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.