இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
200 மில்லியன் அமெரிக்க டொலர் என ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பீடு 10,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் முப்பத்தாறு இலட்சம் ரூபா) எனத் தெரியவந்துள்ளது.
பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இதை அறிவித்துள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய ரத்தினக் கொத்தணி என கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும், ஆனால் இது ஒரு தொல்பொருள் மதிப்பை மட்டுமே கொண்டுள்ளது என்றும் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மாணிக்கக்கல் கொத்தணி, துபாயிக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுவிஸர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
எனினும், இந்த கல்லை விற்பனை செய்துக்கொள்ள முடியாது நிலைமை காரணமாக, குறித்த மாணிக்கக்கல் கொத்தணி மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.