புதிய பாராளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்படுவதையொட்டி பூரி கடற்கரையில் பாராளுமன்ற மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் .1,250 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.
இதனையடுத்து மக்களவைக்குள் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவுகிறார்.
புதிய பாராளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த மணற்சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் புதிய பாராளுமன்றம் போன்ற மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இந்த மணல் சிற்பத்தை மக்கள் கண்டு களித்து செல்கின்றனர். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.