Our Feeds


Wednesday, May 24, 2023

ShortNews Admin

முஸ்லிம் பெண்களின் உரிமையை போராடி வென்றமைக்காக, சகோதரியே! வரலாற்றில் நிச்சயம் உங்கள் பெயர் பேசப்படும் - பஸ்லான் பாரூக் அறிக்கை



ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை மதித்து, எதிர்காலத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் கூறி, நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை இணக்கமாக முடித்துக்கொள்ள விரும்புவதாக சண்முகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் தரப்பானது திறந்த நீதிமன்றத்தில் முன்மொழிந்ததன் ஊடாக, 05  வருடமாக விசாரிக்கப்பட்ட வழக்கு சுமூகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது .


இது இரு சமூகத்துக்கு இடையில் இருந்த தவறான புரிதல்களை நீக்கி, தமிழ் பேசும் சிறுபான்மை சமூகத்தின் உறவை இன்னும் பலப்படுத்தியுள்ளது .


ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்கள்  முஸ்லீம் பெண்களின் கலாச்சார ஆடையான  ஹபாயாவை அணிந்து அரச அலுவலகங்களுக்கு பணிபுரியச் செல்லலாம் என்ற உரிமையை 05 வருடங்களாக பல சிரமங்கள், மனஉளைச்சல்களுக்கு மத்தியில் போராடி வென்று தந்துள்ளார். 


சகோதரியே முஸ்லிம் பெண்களின் உரிமையை நீங்கள் போராடி வென்று தந்துள்ளீர்கள். வரலாற்றில் நிச்சயம் உங்கள் பெயர் பேசப்படும் . 


அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக . ஆமீன் .


இந்த வழக்கை 05 வருடமாக போராடி வென்று தந்த குரல்கள் அமைப்பின் சட்டத்தரணிகளுக்கு ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகம் சார்பாக என்னுடைய  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் .

உங்களை போல் உரிமைகளுக்கு குரல் கொடுத்து, போராடும் தலைவர்கள் சமூகத்துக்கு அவசியம் தேவை . 

உங்களை போன்றவர்களை தான் சமூகம் ஏக்கத்துடன் தேடி கொண்டிருக்கின்றது .

• Raazi Mohamed

• Shathir Mohammed

• Hassan Rushdhy

• Radheef Ahamed

• Musthafa Abdul Sufair

உங்களுக்கு முஸ்லீம் சமூகம் என்றும் கடமைப்பட்டுள்ளோம் .

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் சேவைகளை பொருத்திகொல்வானாக .

ஆமீன்.

 FAZLAN FAROOK.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »