கெப்பித்திகொல்லாவ, கபுகொல்லேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலியகட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை (9) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கபுகொல்லேவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் செவ்வாய்க்கிழமை (9) முறைப்பாடு ஒன்றினை விசாரிப்பதற்காக அலியகட பிரதேசத்திற்குச் சென்றிருந்த போது அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டு சிலரால் தாக்கப்பட்டிருந்தனர்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கபுகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது அலியகட பிரதேசத்தைச் சேர்ந்த 21,23 மற்றும் 24 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கெப்பித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கபுகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்