Our Feeds


Tuesday, May 2, 2023

ShortNews Admin

சீருடையுடன் டான்ஸ் ஆடிய பொலிஸ்காரருக்கு ஆப்பு!



இசை நிகழ்ச்சி மேடையில் சீருடையில் நடனமாடியதாக கூறப்படும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய நேற்று (01) பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.


கடந்த 30ஆம் திகதி களனி – பியகமவிலுள்ள விளையாட்டரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போதே, இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மேடையில் ஏறி – பாடகர் ஒருவரின் பாடலுக்கு நடனமாடியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »