பனாமா நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கப்பல் நேற்று கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு பாரசீக வளைகுடா கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, அந்த எண்ணெய் கப்பலை ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடற்படை இடைமறித்துள்ளது.
சர்வதேச கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த பனாமா எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை இடைமறித்து தங்கள் எல்லைக்குள் கொண்டு சென்றதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
அதேவேளை, பனாமா எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது தொடர்பாக ஈரான் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.