மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.15.05.2023.
350 மேற்பட்ட பெற்றோர்கள் இணைந்து காபெகஸ் தமிழ் வித்தியாலயம் முன்பாக அந்த வித்தியாலய அதிபரை உடன் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது உள்ள அதிபர் மாணவர்களிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை எனவும், மாணவர்களை தாக்குவதாகவும் கல்வி சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தவில்லை எனவும் இவ்வாறான அதிபர் மூலம் மாணவர்களின் எதிர்காலம் முறையாக அமையாது என கோரிக்கை முன் வைத்து போராட்டம் ஒன்றை இன்று காலை 9.30 மணிமுதல் நடத்தினார்கள்.