ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜா உள்ளிட்ட இரு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.
குழுவின் ஏனைய உறுப்பினராக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் உள்ளார்.
இலங்கை வந்துள்ள ஐ.சி.சி. அதிகாரிகள், விளையாட்டுத்துறை அமைச்சர், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி விசாரணைகளை முன்னெடுத்து தகவல்கள் கண்டறிவார்.
அரசியல் தலையீடுகள் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் தரப்பில் இருந்து பலமுறை முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை ஐ.சி.சி. நியமித்திருந்தது.
இதன் பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஐ.சி.சி தலைவர் கிரே பார்க்லேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி சந்திப்பொன்றை மேற்கொள்ள சந்தர்ப்பமொன்றை கோரினார்.
இந்நிலையிலேயே இந்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2022ல் அரசியல் தலையீடு இலங்கை கிரிக்கெட்டில் நிரூபிக்கப்படுமாயின் ஐசிசி உறுப்புரிமை ரத்து செய்யப்படலாம்.
ஐ.சி.சி.யின் விதிகளின்படி, விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் இறுதி நோக்கத்துடன் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.