Our Feeds


Wednesday, May 10, 2023

ShortNews Admin

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் விசேட அறிவிப்பு



வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவில் உள்ள கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி, குருநாகல் பிராந்திய அலுவலகங்கள் ஆகியவற்றின் ஆவண அங்கீகார செயன்முறை மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது.

 

சுமூகமான ஆவண அங்கீகார செயன்முறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் முகமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு துரிதமான திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போது, மிகவும் அவசரமான ஆவணங்களுக்கு மட்டுமே கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு அங்கீகாரமளிப்பதுடன், கணினி பழுதுபார்க்கப்பட்டவுடன் ஏனைய ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கப்படும்.

 

ஏனைய கொன்சியூலர் சேவைகள் எந்தவித தடங்கலும் இன்றி இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அங்கீகார செயன்முறை முழுமையாக செயற்படுத்தப்பட்டவுடன் அது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிநுட்பக் கோளாறினால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் வருந்துகின்றோம் என்றும் குறிப்பிடத்தக்கது.

 

தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் குறித்து, பொதுமக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ள முடியும்.


கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு, கொழும்பு - 0112338812

பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் - 0212215972

பிராந்திய அலுவலகம், திருகோணமலை - 0262223182/86

பிராந்திய அலுவலகம், கண்டி - 0812384410

பிராந்திய அலுவலகம், குருநாகல் - 0372225931

பிராந்திய அலுவலகம், மாத்தறை - 0412226713/0412226697

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »