போதகர் ஜெரோம் பெர்ணான்டோவின் வெறுப்பூட்டும் கருத்துக்கு எதிராக அனைத்துக் கட்சிப் போராளிகள் அமைப்பின் பேச்சாளர் நிராஷன் விதானகே குற்றப்பலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
“குறித்த போதகரின் கருத்துகளுக்கு பின் பெரும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு இருக்குமா என எமக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகிறது. கோட்டபாய ராஜபக்சவை தேர்வு செய்வதற்கான மோசமான சதித் திட்டங்களை இந்தக் கருத்துகள் எமக்கு நினைவூட்டுகின்றன“ என அவர் தெரிவித்தார்.