Our Feeds


Monday, May 29, 2023

News Editor

அருவக்காலு குப்பை கிடங்கு குறித்து அமைச்சரின் தீர்மானம்


 அருவக்காலு குப்பைகளை இறக்குதல், குப்பைகளை ஏற்றுதல் மற்றும் குப்பைகளை சேமித்து வைக்கும் வசதி ஆகியவற்றின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


இதன் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகர திடக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண சுகாதாரமான குப்பை கிடங்கு வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த குப்பை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் அருவக்காலு குப்பைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன்படி, கொழும்பு நகரில் நாளாந்தம் சேகரிக்கப்படும் சுமார் 1200 மெற்றிக் தொன் குப்பைகளை களனி, வனவாசலையில் இருந்து சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள புத்தளம், அருவக்காலு குப்பைத் தளத்திற்கு ரயில் மூலம் கொண்டு செல்வது இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

அருவக்காலு குப்பை மேடு மற்றும் களனி, வனவாசலை கழிவுப் பரிமாற்ற நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், சீன நிறுவனமான சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனமும், சீனாவின் சவுத்வெஸ்ட முனிசிபல் இன்ஜினியரிங் அண்ட் ரிஸேச் இன்ஸ்டிடியூட் ஓப் சைனா நிறுவனமும் அதன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இக்கழிவுகள் அருவக்காலு கழிவுநீர் மையத்தில் கொட்டப்பட்டு, அதன்பின் அருகில் உள்ள சுகாதாரக் குப்பை கிடங்கில் அப்புறப்படுத்தப்படுகிறது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக இரண்டு புகையிரத பயணங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

திடக்கழிவு போக்குவரத்து தொடங்கியவுடன், இந்த ரயில் பாதையில் போக்குவரத்து கடுமையாக இருக்கும். எனவே, புத்தளம் நூர் நகரில் இருந்து அருவக்காலு வரை தற்போதுள்ள புகையிரத பாதையை மேம்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

அதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சும் இணைந்து அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளன.

செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக அருவக்காலுவில் புதிய ரயில்வே முற்றம் மற்றும் நடைமேடை மற்றும் புதிய கடவை அமைப்பதற்கும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக 186,120,025.23 ரூபாவை புகையிரதத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »