முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்..சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, அதிக விலை கொடுத்து முட்டைகளை வாங்க வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
ஒரு வெள்ளை முட்டை மொத்த விலையில் 40 ரூபாய்க்கும், பழுப்பு முட்டை 41 ரூபாய்க்கும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பேக்கரிகளில் இருந்து 44-45 ரூபாய்க்கு முட்டை கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
வெள்ளை முட்டை ஒன்றிற்கு 44 ரூபாவும், பழுப்பு நிற முட்டை ஒன்றிற்கு 46 ரூபாவும் நுகர்வோர் அதிகாரசபை கட்டுப்பாட்டு விலையை பிறப்பித்துள்ள போதிலும், இம்மாத இறுதிக்குள் முட்டையின் விலை மேலும் குறைவடையும் எனவும், குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், பேக்கரிகள், ஹோட்டல்கள் மற்றும் மளிகைக் கடைகளுக்கு போதுமான உள்ளூர் முட்டைகளை வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.