Our Feeds


Sunday, May 28, 2023

ShortNews Admin

மற்றுமொரு சர்ச்சையில் சிக்கினார் ஜெரோம் பெர்ணான்டோ - விமான நிலைய பாதுகாப்பு பகுதிக்குள் எப்படி போனார்?



சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ கடந்த வருடம் சிம்பாப்வே போதகர் உபேர்ட் ஏஞ்சலை வரவேற்பதற்காக கொழும்பு விமான நிலையத்தின் மிகவும் பாதுகாப்பான பகுதிக்குள் எவ்வாறு சென்றார் என கேள்விகள் எழுந்துள்ளன.


ஜெரோம் பெர்ணாண்டோ தனது தனிப்பட்ட செல்வாக்கையும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி பாதுகாப்பு ரீதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றுள்ளார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமான நிலையத்தின் பாதுகாப்பு ரீதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் மிக முக்கிய இராஜதந்திரிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் விவிஐபி பேருந்தில் ஜெரோம் பெர்ணாண்டோ சிம்பாப்பே போதகருடன் காணப்படும் படம் கிடைத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹெரத் அந்த படம் விமான நிலையத்தின் அதிஉயர் பாதுகாப்பு பகுதிக்குள் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளார். அந்த பகுதிக்குள் நுழைவதற்கான அனுமதியை ஜெரோம் பெர்ணாண்டோ எவ்வாறு பெற்றார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொறியியலாளரை தவிர வேறு எவரும் அந்த பகுதிக்குள் நுழைய முடியாது இது எவ்வாறு இடம்பெற்றது என்பது தெரியாது என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளார்  அவர்கள் விருந்தினர்களிற்காக காத்திருக்கும் பகுதியில் அல்லது ஓய்வறையில் காத்திருக்கலாம் ஆனால் அவர்கள் மிகமிக முக்கியமான பிரமுகர்களிற்கான பேருந்தில் ஏற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இது எவ்வாறு இடம்பெற்றது என ஆராய வேண்டும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

the morning

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »