கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் காதல் ஜோடி கோபுரத்தின் சுவரில் தமது பெயர்களை எழுதும் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (30) மாலை பாதுகாப்புப் படையினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்த அதன் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்கள் அதன் உடைமைகளை சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்திருந்த நிலையில் இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.