பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மீது தடை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கான் கடந்த 9 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது, அவரை துணை இராணுவ படையினர் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ராவல்பிண்டியில் உள்ள இராணுவ தலைமையகமும் தாக்கப்பட்டது. வன்முறை மோதலில் 10 பேர் பலியானதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் பொது சொத்துக்கள் தனது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களை கண்டிக்க இம்ரான் கான் இன்னும் தயங்குவதாக கூறினார்.
'இராணுவ நிலைகளை தாக்கியதால் அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (பிடிஐ) தடை செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.