இந்தியாவின் கர்நாடக மாநிலம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியாவின் ஆளும் கட்சியான பிரதமர் மோடியின் பாரதீய ஜனதா கட்சி கர்நாடக மாநிலத்தில் படுதோல்வியடைந்துள்ளதுடன் காங்கிரஸ் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்சையாக வெடித்து உலகம் முழுவதும் பேசுபொருளான முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாப் விவகாரத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்கு வருவதற்கு தடை விதித்த பா.ஜ.க வின் கல்வி அமைச்சர் சி.பி நாகேஷ் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.