தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு வசதியாக அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பயன்படுத்திய மடிக்கணினிகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அரச பகுப்பாய்வாளருக்கு நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்மொழியப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் விசாரணையை மே 8 ஆம் திகதிக்கும் அவர் ஒத்திவைத்தார்.
இதேவேளை தினேஷ் சாப்டரின் உயிரிழப்பு தொடர்பில் உண்மையை கண்டறியும் வகையில் நீதிமன்றால் அமைக்கப்பட்ட குழுவில் பேராசிரியர் அசேல மெண்டிஸ், பேராசிரியர் டி.சி.ஆர். பெரேரா, பேராசிரியர் டி.என்.பி. பெர்னாண்டோ, கலாநிதி சிவ சுப்ரமணியம் மற்றும் கலாநிதி ரொஹான் ருவன்புர ஆகியோர் செயற்படுகின்றனர்