கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் , மாணவர்களை சேர்க்கும் போது சுமார் 76 இலட்சம் ரூபா நிதியை முறைகேடு செய்ததாக கூறப்படும் அதிபர் ஒருவர் அந்த பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டு கொழும்பு கல்வி வலயத்தின் மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் அவர் கல்வி அமைச்சில் இணைக்கப்பட்டு பின்னர் கொழும்பு கல்வி வலயத்திற்கு விடுவிக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.