உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச பணியாளர்கள் இன்று (09) தொடக்கம் கடமைக்குத் திரும்ப முடியும். குறித்த பணியாளர்களை மீண்டும் பணியில் இணைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த அரச பணியாளர், தாங்கள் வேட்பாளராக போட்டியிடும் உள்ளூராட்சி எல்லைக்குள் பணிபுரிந்தால், அதற்கு வெளியே உள்ள அரச அல்லது அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்று பணியில் இணைய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த அரச பணியாளர்கள் இன்று (9) முதல் – அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களால் நியமிக்கப்பட்ட பணியிடங்களில் கடமைக்குச் சமுகமளிக்க முடியுமென அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.