கல்விப் பொதுத்தராதர சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள்,கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.