14வது தேசிய போர்வீரர் நினைவேந்தல் இராணுவ வெற்றிவிழா நிகழ்வு நாளை (19) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர தேசிய போர் வீரர் நினைவுத்தூபியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
ரணவிரு சேவா அதிகாரசபையானது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தாய்நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டைக் காக்க தம் இன்னுயிர்களை தியாகம் செய்த பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகளின் வீரர்களை நினைவுகூரும் வகையில், அவர்களைப் பாராட்டும் வகையில் இங்கு விசேட இசை ஒலிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் இடம்பெறவுள்ளது.