சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்த வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.