வீரவில பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தீய சக்திகளை விரட்டுவதாக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் ஒருவன் கையில் தீக்காயங்களுடன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விகாரையில் பூஜை செய்த விகாராதிபதி, தோஷம் விலக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சிறுவனின் வலது கையில் பலத்த தீக்காயத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத், தீக்காயங்களுடன் சிறுவன் வீரவில வைத்தியசாலையிலும் பின்னர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விகாராதிபதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.