இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணையை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி இந்த விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக் குழுக் கூட்டத்தின் போது கட்சித் தலைவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.