Our Feeds


Sunday, May 7, 2023

SHAHNI RAMEES

நாட்டில் தொற்று நோய் பரவும் அபாயம்..! - அவதானமாக செயற்படவும்

 

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.



மழையுடன் ஈக்கள் போன்ற போன்றவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளமையே இந்த நோய்களுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



சிறு குழந்தைகளை இவ்வாறான நோய்களில் இருந்து பாதுகாக்க சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம் என அவர் தெரிவித்தார்.



இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் தொற்றுநோய்களின் பரவலும் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.



மேலும், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நேற்று 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.



நேற்றைய தினம் புதிதாக 08 கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »