யாழ். மாநகரசபை முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் வைத்து ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வாக்குமூலம் பெற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட ஆனோல்ட் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இனறு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.