குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கடந்த 10.05.2023 ஆம் திகதி அமீஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மேற்படி திட்டத்திற்கான அனுசரணையை புனித மக்கா ஹரம் ஷரீபில் நீண்ட காலமாக பணி புரிந்து வரும் இலங்கையைச் சேர்ந்த அஷ் ஷெய்க் முஹம்மது பின் ரியால் அஸ் செய்லானி அவர்கள் வழங்கியிருந்தார்கள். நிகழ்வில் அனுசரணையாளருடன், அமீஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ் ஷெய்க் எம். எஸ். எம் தாஸீம் அவர்களும், நிறைவேற்றுப் பணிப்பாளர் சகோதரர் A.J.M. ஜபருல் வாரித் அவர்களும், அல்ஹாஜ் முளப்பர் கவ்னைனி அவர்களும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் எம். எம். எம். முப்லி அவர்களும் கலந்து கொண்டனர்.