Our Feeds


Monday, May 22, 2023

ShortNews Admin

மே 9 அரசியல்வாதிகளின் வீடுகள் எரிப்பு : மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அமைச்சர் பந்துல தாக்கல் செய்த மனு வாபஸ்



நாடளாவிய ரீதியில் கடந்த வருடம்  மே மாதம் 9 ஆம் திகதி  அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் எரித்து  நாசமாக்கப்பட்ட சம்பவம்  தொடர்பில் விசாரணை நடத்துமாறுகோரி அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்டோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (22) வாபஸ் பெறப்பட்டது.


இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பொது பாதுகாப்பு அமைச்சர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், நடந்த சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தனது கட்சிக்காரர் தெரிவித்ததாக நீதிமன்றத்தில்  கூறினார்.

 மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி  சஞ்சீவ ஜயவர்தன, இதில் திருப்தியடைவதாகவும் அதனடிப்படையில் குறித்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறும் கோரினார்.

இந்நிலையிலேயே மேன்முறையீட்டு  நீதிமன்றம் இந்த மனுவை வாபஸ் அனுமதியளித்தது.

பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர மற்றும் மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும்  அரசியல்வாதிகள் உட்பட  39 பேர் இது தொடர்பான மனுவை முன்வைத்திருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »