பேருவளை வெளிச்ச வீட்டிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மீனவர்கள்
அறுவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடற்படையின் இலங்கை கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்துக்குச் சொந்தமான CG208 படகை பயன்படுத்தி மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மழையுடனான வானிலையால் குறித்த நீண்டநாள் படகானது கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
மொக்கா சூறாவளியினால் காற்றின் வேகம் அதிகரித்துச் செல்லும் சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.