Our Feeds


Saturday, May 27, 2023

ShortNews Admin

50 ரூபாவுக்காக நடத்தப்பட்ட கொலை - கல்கிஸ்ஸயில் நடந்தது என்ன?



50 ரூபா பணத் தகராறில் கல்கிஸ்ஸ உணவகம் ஒன்றின் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபரைக் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


கடந்த 22ஆம் திகதி சந்தேக நபர் பலாப்பழம் விற்பனை செய்ய வந்துள்ள நிலையில் உயிரிழந்தவரிடம் 250 ரூபாவை தருமாறு கேட்டதாகவும், உணவக உரிமையாளர் 200 ரூபாய்தான் தர முடியும் என கூறியதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


குற்றச் செயலின் பின்னர் தப்பிச் சென்ற சந்தேகநபர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »