33 வருடங்களுக்கு முன்னர் சட்ட ரீதியற்ற கணவனுடன் இணைந்து தனது சட்ட ரீதியான கணவரைக் கொன்று தோட்டத்தில் உள்ள மலசலகூடத்தில் சடலத்தை புதைத்து வைத்த சம்பவம் தொடர்பில் ஊருபொக்க பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நபரொருவரை கைதுசெய்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கொலைக் குற்றத்தை செய்தபோது அவருக்கு 36 வயது என்றும், தற்போது அவருக்கு 69 வயது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேக நபர் புவக்தெல பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபரின் அப்போதைய சட்ட ரீதியற்ற மனைவி எனக் கூறப்படும் தற்போது 83 வயதான பெண்ணும் கைதாகப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தற்போது சக்கர நாற்காலியின் உதவியுடன் செயற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.