Our Feeds


Tuesday, May 16, 2023

News Editor

32 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்


 குவைத்துக்கு பணிப் பெண்களாகச் சென்று அந் நாட்டின் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த 32 இலங்கை பெண்கள், இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

 

ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடத்தையோ அல்லது வீட்டையோ விட்டு வெளியேறி வேறு இடங்களில் பணிபுரிந்த நிலையில் சொந்த விருப்பப்படி இலங்கை திரும்புவதற்காக தூதரகத்தில் தம்மைப் பதிவு செய்தவர்களே இவ்வாறு நாடு திரும்பினர்.

 

இவர்கள் அநுராதபுரம், வவனியா, கம்பஹா, கிண்ணியா, கொழும்பு, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »