சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் இதுவரை 25 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
15 மாவட்டங்களில் மொத்தம் 55 பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக டெங்கு ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சுகாதார அமைச்சுப் பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர்.