இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
மேலும் அங்கு கடலில் படகு சவாரி செல்ல சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் குறைந்த நபர்கள் செல்ல வேண்டிய படகில், அதிகமான நபர்களை ஏற்றிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் 2 அடுக்கு கொண்ட சுற்றுலா படகில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்றனர்.
குறித்த படகு திடீரென கடலில் கவிழ்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் குறித்த இடத்தில் விரைவாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
20 பேர் செல்லக்கூடிய படகில் 40 பயணிகள் பயணித்துள்ளனர்.இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.