நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குடியரசு முன்னணி என்ற தனது புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மே 22ம் திகதி சம்பிக்க ரணவக்க புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார். இலங்கை குடியரசாகி மே 22ம் திகதியுடன் 51வருடங்கள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அபிலாசைகளை கொண்டுள்ளார் என கருதப்படும் சம்பிக்க ரணவக்க சமீபத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து வெளியேறினார் எனினும் அவர் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவே தொடர்ந்தும் செயற்படுகின்றார்.
சம்பிக்க ரணவக்க தேசியவாத கொள்கைகளை கொண்ட ஜாதிஹ ஹெல உறுமய கட்சிக்கு தலைமை தாங்குகின்றார்.
2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தது முதல் சில லிபரல் மற்றும் முற்போக்கு கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் போக்கை அவர் வெளிப்படுத்தி வருகின்றார்.
2022 இல் அவர் 43வது பிரிகேட்டை ஆரம்பித்தார். இது அவரது புதிய கொள்கைகளை வெளிப்படுத்துகின்றது.
தனது முன்னையை சகாவான மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரை சம்பிக்கரணவக்க கடுமையாக விமர்சிக்கின்றார், இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு சம்பிக்க ரணவக்க ஆதரவளித்திருந்தார்.
புதிய கட்சிக்கான தெளிவான தேவை உள்ளது என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது நாட்டின் தற்போதுள்ள கட்சிகளும் அமைப்பு முறைகளும் அந்த நிலையை அடைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் இடம்பெற்றுள்ள தேர்தலில் புதிய இளம் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது பாரம்பரிய கட்சிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க இலங்கையிலும் இது இடம்பெறுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.