உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 433-வது நாளாக நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கணித்துள்ளது.
போர் தொடங்கியது முதல் கடந்த நவம்பர் மாதம் வரை 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்று அமெரிக்கா ஏற்கனவே கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.