தனக்கு மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து வட்ஸ்அப் குழுமத்தில் தகவல் அனுப்பியமை தொடர்பில் 19 வயதான மாணவர் ஒருவரை குற்றவியல் விசாரணை திணைக்கள கணினி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இந்த தகவல் ஊடாக குறித்த மாணவன் 16 மாணவியரின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மாணவர் மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடை, நீர்கொழும்பு, கம்பஹா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவியரின் நிர்வாணப் படங்களே சந்தேக நபரான மாணவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.