துளை - பண்டாரவளை - ஹாலிஎல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 ஆண்கள், 3 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 3.40 அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி நித்திரைக் கொண்டமையினால் வேன் ஒன்று வீதியை விட்டு விலகியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.