Our Feeds


Friday, May 19, 2023

SHAHNI RAMEES

கடவுச்சீட்டு பெற்றுக் கொடுக்கும் மோசடியில் 09 தரகர்கள் கைது

 



குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பணம்

பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொடுக்கும் 09 தரகர்கள் இன்று காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பரிசீலிப்பதற்காக 25,000 ரூபா பணம் அறவீடு செய்து வரிசையில் நிற்காமல் முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாக இந்தக் கடவுச்சீட்டுகள் பெற்றுக் கொள்ளும் நடைமுறை குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், அதனை உடனடியாக மேற்கொள்ளுமாறும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.



இது தொடர்பாக விசாரணை நடத்தி இன்று காலை இவர்களிடம் பணம் பெற்ற 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்நடவடிக்கைகள் தொடரும் என்றும், மோசடியாளர்களுடன் இணைந்து செயல்படும் அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »