மொரோக்கோ ரபாத் மாநகரில் அமைந்துள்ள மன்னர் மாளிகையில் அதிமேதகு மன்னர் ஆறாவது முஹம்மத் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் 'அல்ஹசனியத்துல் ரமழானிய்யா' என்ற வகுப்பு தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அல் உஸ்தாத் முஹம்மத் ரிஸ்வி முஹம்மத் இப்ராஹிம் அவர்கள் 31 மார்ச் 2023 ரமழான் பிறை 09 வெள்ளிக்கிழமை அன்று 'அல்குர்ஆன், சுன்னாவின் ஒளியில் நாம் எப்படி ஒரு முன்மாதிரி சமூகமாக அமைவது?' என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தார்கள்....
அவர்களது ஆய்வின் போது 'மனிதர்கள் தங்கம் வெள்ளி போன்ற சுரங்கங்கள்' என்ற நபிமொழியை அடிப்படையாக வைத்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி வகுப்புத் தொடர் வானொலி அலைவரிசைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒலி, ஒளி பரப்பப்பட்டமை மேலதிக சிறப்பம்சமாகும்.